கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி


கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 2 Oct 2025 11:54 AM IST (Updated: 2 Oct 2025 12:54 PM IST)
t-max-icont-min-icon

மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், பேஸ் மேக்கர் கருவி பொருத்த அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்படது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கேவை, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், கார்கேவை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“கார்கேவிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் அவர் குணமடைய வாழ்த்தினேன். அவரது தொடர்ச்சியான நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story