நாட்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை: பியூஸ் கோயல்

மக்களை தவறாக வழிநடத்தும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெறாது என்று பியூஸ் கோயல் கூறினார்.
 நாட்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை: பியூஸ் கோயல்
Published on

மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவு மற்றும் நட்பை பயன்படுத்தி வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி இறுதி செய்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது அண்டை நாடுகள், சுற்றி உள்ள நாடுகள், அமெரிக்கா உடன் போட்டியிடும் நாடுகள் பெற்றுள்ள ஒப்பந்தத்தை விட இந்தியா பெற்றுள்ளது மிகச் சிறப்பான ஒப்பந்தம் ஆகும். நம் அனைவருக்கும் சிறந்த ஒப்பந்தம் இது. பிரதமர் மோடி உறுதி செய்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய பொருளாதாரம், 140 கோடி மக்கள், ஏழைகள் விவசாயிகள், மீனவர்கள், கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், சகோதரிகள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகும்.

மக்களை தவறாக வழிநடத்தும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெறாது. இந்தியா முன்னேறி கொண்டு இருக்கிறது. உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை.வரியை குறைத்தது அமெரிக்கா. அதன் காரணமாகவே அவர்கள் முதலில் அறிவித்தனர். இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டும் இல்லை. வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனையாகும். 2047 ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை இந்த ஒப்பந்தம் விரைவுபடுத்தும்” என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com