காஷ்மீர் தாக்குதல் விசாரணை குறித்து ராஜ்நாத்சிங் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை

காஷ்மீர் தாக்குதல் விசாரணை குறித்து, ராஜ்நாத்சிங் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர் தாக்குதல் விசாரணை குறித்து ராஜ்நாத்சிங் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தனது இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, ரா அமைப்பின் தலைவர் அனில் தாஸ்மனா, நுண்ணறிவு பிரிவு கூடுதல் இயக்குனர் அரவிந்த்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகாரிகளுடன் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக கடந்த 48 மணி நேரத்தில் நடந்த விசாரணை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு படை அளித்த முதல்கட்ட அறிக்கையில், பயங்கரவாதி வெடிகுண்டுகளுடன் சக்திவாய்ந்த ரசாயனத்தையும் கலந்து இருந்தது தெரிந்தது. தேசிய புலனாய்வு பிரிவையும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரிக்க ராஜ்நாத் சிங் அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com