ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 2வது தவணையாக ஐதராபாத் வந்து சேர்ந்தது

ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 2வது தவணையாக இன்று ஐதராபாத்துக்கு வந்து சேர்ந்தது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 2வது தவணையாக ஐதராபாத் வந்து சேர்ந்தது
Published on

ஐதராபாத்,

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் முதல்கட்டமாக கடந்த மே1 ஆம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இன்று 2-வது கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் தனிவிமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்து சேர்ந்தன.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் இந்த வாரத்தில் விற்பனைக்கு வரும் நிலையில் ,ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை (ஜி.எஸ்.டி. சேர்த்து)ரூ.995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் குடாஷேவ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது, உருமாறிய கொரோனாவிற்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட உள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில், அடுத்த ஒரு ஆண்டிற்குள் 850 மில்லியன் டோஸ்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே தவணையில் செலுத்தும் தடுப்பூசியை தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com