சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு


சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு
x
தினத்தந்தி 29 July 2025 11:21 AM IST (Updated: 30 July 2025 6:00 AM IST)
t-max-icont-min-icon

புதிய நெற்கதிர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 5 நாள் தொடர் வழிபாட்டுக்குப் 21-ம் தேதி இரவு நடைசாத்தப்பட்டது. இந்நிலையில் 'நிறைபுத்தரிசி' பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.

பருவநிலை மாற்றத்தால் ஆலப்புழா மாவட்டத்தில் நெற்பயிர்கள் முன்கூட்டியே அறுவடைக்கு தயாரானதால், சபரிமலையில் வழக்கமாக ஆகஸ்ட் 2வது வாரத்தில் நடத்தப்பட வேண்டிய 'நிறைபுத்தரிசி பூஜை' நாளை நடைபெறுகிறது. 2 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீலிமலை பாதை வழுக்கும் தன்மை உள்ளதால் சுப்பிரமணிய பாதையில் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரளாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தரிசனத்துக்கு வருபவர்கள் குடை உள்ளிட்ட மழை பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

1 More update

Next Story