மேகாலயா சுரங்க விபத்து; பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.
மேகாலயா சுரங்க விபத்து; பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
Published on

சில்லாங்,

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நேற்று 16 பேரின் உடல்கள மீட்டனர்.

இந்நிலையில், மீட்புப்பணிகள் இன்று தொடர்ந்து நடைபெற்றது. இதில் மேலும் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் நிலக்கரி சுரங்க விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com