எஸ்.ஐ.ஆர் பணிகள்; மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எந்தவிதத்திலும் தடையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்கமாட்டோம் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.
எஸ்.ஐ.ஆர் பணிகள்; மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
Published on

மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட ஏராளமானோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, அஞ்சாரியா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த துணை பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அதில் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாக தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டி இருந்தது.

குறிப்பாக, தேர்தல் கமிஷனின் நோட்டீசுகள் எரிப்பு உள்பட பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கமிஷன் சுட்டிக்காட்டி இருந்தது. இதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், தேர்தல் கமிஷனின் இந்த பிரமாணப் பத்திரத்துக்கு பதில் மனு தாக்கல் செய்ய மாநில போலீஸ் டி.ஜி.பி.-க்கு அறிவுறுத்தினர். அத்துடன், இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எந்தவிதத்திலும் தடையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர். இதை மாநிலங்கள் தெளிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com