பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அவர் 2021-ம் ஆண்டு பதவியேற்றதும் தனது முதல் சுதந்திர தின உரையில் ‘மாத்ரி பித்ரி வந்தனா’ திட்டத்தில் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார். அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வருகிற நவம்பர் 14, 15-ந் தேதிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பை பெற (சி.எல்.), அரசு அனுமதிக்கிறது. இந்த விடுமுறையை அதற்கான வழிகாட்டலின் அனுமதியுடன் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவில் மாநில கவர்னரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story






