ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை பங்கு சந்தையில், டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, டிரென்ட் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு உயர்ந்து காணப்பட்டது.
அது, தொடக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து, 80,932 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 100-க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்து 24,808.40 புள்ளிகளாக இருந்தது.
இதில் மும்பை பங்கு சந்தையில், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, அதானி போர்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்துடன் தொடங்கின. எனினும், டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, டிரென்ட் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி 0.26 சதவீதம் லாபத்துடன் காணப்பட்டது. உலோக பிரிவானது 1 சதவீதத்திற்கு கூடுதலான லாபத்துடனும், நடுத்தர சிறு சுகாதார நலன் பிரிவானது 0.53 சதவீதம் நஷ்டத்துடன் காணப்பட்டது.
வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






