புதுடெல்லி,
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று உரையாற்ற இருந்த நிலையில், அதற்கு முன்பாக அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், “மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி மூத்த மந்திரிகளின் மேஜைக்கு அருகே சென்று ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் பிரதமர் மோடியை தாக்க சதி திட்டம் தீட்டினர்.
எனவே நான்தான் அவைக்கு வர வேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் மக்களவைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும். நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை” என்று தெரிவித்தார். சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்று காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த பரபரப்புக்கு இடையே மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்ததாலும், சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் எனக்கு எதிர்க்கட்சிகள் சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்.
25 வருடங்களாக எதிர்க்கட்சிகள் என்னை சாடுகின்றன. கல்லறை குறித்து அவர்கள் பேசுவது வெறுப்பை காட்டுகிறது. பிரதமர் பதவி என்பது இவர்களின் குடும்பச் சொத்து என்று கருதுகிறார்கள். காந்தி குடும்பத்திற்கு தேசம் பல வாய்ப்புகளை தந்தும் ஏழ்மையை ஒழிக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.