ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கி 3 பக்தர்கள் பலி

ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
அமராவதி,
ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமையா மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் அமைத்துள்ள தலகோணா கோவிலுக்கு 30 பேர் கொண்ட பக்தர்கள் குழு இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த யானைகள் குழு அவர்களை தாக்கியது. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரில் இருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பிய பக்தர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டபோது இறந்த பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






