

இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான பீரங்கி, போதைபொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை இந்தியா-மியான்மர் எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் போலீசார் செயலிழக்க செய்தனர்.