உணவு விவகாரம்: ஜேஎன்யு பல்கலைக்கழக மோதல் குறித்து அறிக்கை கேட்ட மத்திய அரசு

இந்து மத பண்டிகையான ராம நவமியன்று ஜேஎன்யு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி,

இந்து மத பண்டிகையான ராம நவமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வட இந்தியாவில் கொண்டாடப்பட்டது. அந்த பண்டிகையின் போது பல்வேறு மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.

இதற்கிடையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமையன்று இந்து மத பண்டிகையான ராம நவமி கொண்டாடினர். பல்கலைக்கழகத்தின் வளாக விடுதியில் இந்த கொண்ட்டாட்டம் நடைபெற்றது.

அதேபோல், பல்கலைக்கலக விடுதியில் இஸ்லாமிய மத பண்டிகையான ரம்ஜான் நிகழ்ச்சியின் இப்தார் நோம்பு நிகழ்ச்சியை இடதுசாரி மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் அமைப்பினர் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஜேஎன்யு பல்கலைக்கழக விடுதியில் உள்ள காவேரி ஓட்டலில் இரவு உணவாக அசைவ உணவு பறிமாறப்பட்டது. இதற்கு வலதுசாரி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வலது சாரி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில், மாணவர் ஒருவரை ஒருவர் தாக்கினர். இந்த மோதல் சம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்தனர். மோதல் குறித்து ஜேஎன்யு பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், விடுதியில் மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் குறித்து ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மத்திய கல்வித்துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது. பல்கலைக்கழகம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய கல்வித்துறை இந்த மோதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com