பைக் மீது லாரி மோதி விபத்து; கணவன் கண்முன்னே இளம்பெண் உடல்நசுங்கி பலி


பைக் மீது லாரி மோதி விபத்து; கணவன் கண்முன்னே இளம்பெண் உடல்நசுங்கி பலி
x

லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் பாதியானா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஓம். இவரது மனைவி அனுராதா. இதனிடையே, கணவன், மனைவி இருவரும் நேற்று மாலை குலோதி நகரில் உள்ள சந்தைக்கு பைக்கில் சென்றுள்ளனர்.

ஹரிஓம் பைக்கை ஓட்டிய நிலையில் அவரது மனைவி பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். தவ்லானா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி , பைக் மீது மோதியது. இதில், லாரியின் பின் பக்க டயரில் சிக்கிய அனுராதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். ஹரிஓம் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் ஹரிஓமிற்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார், மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த ஹரிஓமை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த அனுராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story