பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இரு தலைவர்களும் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்து வரக்கூடிய சூழலில், ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இத்தகைய சூழலில் டிரம்பும் மோடியும் தொலைபேசி வாயிலாக பேசியிருப்பதால், இரு தலைவர்களும் வர்த்தக விவகாரம்,வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து பேசியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com