மராட்டியம்: 400 மீட்டர் பயணிக்க அமெரிக்க சுற்றுலா பயணியிடம் ரூ. 18 ஆயிரம் வசூலித்த டாக்சி டிரைவர் கைது

மும்பை விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் ஓட்டலுக்கு புறப்பட்டுள்ளார்.
மராட்டியம்: 400 மீட்டர் பயணிக்க அமெரிக்க சுற்றுலா பயணியிடம் ரூ. 18 ஆயிரம் வசூலித்த டாக்சி டிரைவர் கைது
Published on

மும்பை,

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் அர்ஜெண்டினா அரினோ. இவர் மராட்டிய மாநிலம் மும்பைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

கடந்த 12ம் தேதி மும்பை வந்த அரினோ விமான நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் நட்சத்திர ஓட்டலில் தங்க முன் பதிவு செய்துள்ளார்.

அதன்படி, மும்பை விமான நிலையத்தில் இருந்து ஒரு டாக்சியில் அந்த ஓட்டலுக்கு புறப்பட்டுள்ளார். வெளிநாட்டு பயணி என்பதால் அரினோவை ஏமாற்ற நினைத்த டாக்சி டிரைவர் ஓட்டலுக்கு நேர் வழியில் செல்லாமல் சுமார் 30 நிமிடங்கள் மாற்று வழியில் காரை இயக்கியுள்ளார்.

இறுதியில் ஓட்டலில் அரினோவை இறக்கி விட்ட டிரைவர், பயணத்திற்கான தொகையாக 18 ஆயிரம் ரூபாய் (200 அமெரிக்க டாலர்கள்) கேட்டுள்ளார்.

இதனை நம்பிய அரினோ டாக்சி டிரைவர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரினோ தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து தெரிவித்து மும்பை போலீசை டாக் செய்துள்ளார்.

அரினோவில் டுவிட் வைரலான நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய மும்பை போலீசார் , திஷ்ராஜ் (வயது 50) என்ற டாக்சி டிரைவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com