“வெற்றி மேல் வெற்றி சேர..” - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து

முருகப் பெருமானின் பூரண அருள் என்றும் துணை நிற்க்கட்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“வெற்றி மேல் வெற்றி சேர..” - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தைப்பூச வாழ்த்து
Published on

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

"அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும், இணை இன்றித் தான்உடையான் ஏந்திய வேல் அன்றே, பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம் மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள்வேலே" என வேல் ஏந்தி அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டி எந்நாளும் நம்மை காத்தருளும் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துகள்.

தைப்பூச நன்னாளில் முருகன் அருளால் நாட்டில் அறியாமை என்னும் இருள் நீங்கி ஞான ஒளி பரவட்டும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகட்டும், வறுமை நீங்கி வளம் பெருகட்டும், கவலைகள் தீர்ந்து மக்கள் வாழ்வெல்லாம் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகி, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருள் என்றும் துணை நிற்க்கட்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com