வாக்காளர் அதிகார யாத்திரை: ராகுல் காந்தியுடன் பிரியங்கா, ரேவந்த் ரெட்டி பங்கேற்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
பாட்னா,
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது.
இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணி இன்று 10- வது நாளை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி, தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






