ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்கிரஸ் கேள்வி


ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்?  காங்கிரஸ் கேள்வி
x

ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன் ? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

அபுதாபி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இப்போது மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.125 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன் ? என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரசின் கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது,

ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்களே இல்லையா? இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால் உடனே ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்திவிடுவார்கள். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story