மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

விமானங்களில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு எர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது.

விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறியதை தொடர்ந்து விமானம் புறப்பட ஓடுதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது.

அப்போது, ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் ஓடுதளத்தில் இருந்து விமானத்தை நிறுத்தும் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது.

அப்போது, இரு விமானங்களின் இறக்கைகளும் உரசின. இதில், விமானங்களின் இறக்கைகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரு விமானங்களில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com