செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கொரோனா தொற்றால் ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
Published on

இந்தநிலையில் வருகிற நவம்பர் மாதம் 1-ந்தேதி தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை திறக்கப்பட உள்ளது. அதனால் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து துறையின் கீழ் இயங்கக்கூடிய பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் தனியார் பள்ளி பஸ் மற்றும் வேன்கள் உள்பட 45 வாகனங்களின் தரம், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கேமரா, போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், வருவாய் ஆர்.டி.ஓ. பர்வீன் பானு, மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ்பச்சாரே, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா ஆனந்தன், முரளி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com