உள்ளாட்சி தேர்தல்: பொழிச்சலூரில் கமல்ஹாசன் பிரசாரம்

பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொழிச்சலூர், பொழிச்சலூர், வேங்கைவாசல் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.
உள்ளாட்சி தேர்தல்: பொழிச்சலூரில் கமல்ஹாசன் பிரசாரம்
Published on

அப்போது அவர் பேசியதாவது:-

உங்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறோம். உங்கள் கையில் அதிகாரம் வருவதற்கான வாய்ப்பு இது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுபவர்களை வேலை வாங்க வேண்டியது உங்களது கடமை. மறதி என்பது தேசிய நோய். மறதி இருப்பதால் தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர முடிகிறது.

இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. இங்கு அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் இல்லை. அனைவரும் கிராம சபை கூட்டத்துக்கு சென்று, கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மேம்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com