வானவில் : மாற்றுத் திறனாளிகளுக்கு ‘லாட் ரோலர்’ சக்கர நாற்காலி

கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல உண்டு.
வானவில் : மாற்றுத் திறனாளிகளுக்கு ‘லாட் ரோலர்’ சக்கர நாற்காலி
Published on

டிமிட்ரியோஸ் என்னும் கட்டிட அமைப்பாளர் வாடிக்கையாளருக்காக ஒரு வீட்டை வடிவமைக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொண்டார். மேலே இருக்கும் பொருட்களை எடுக்க, எதிரே இருக்கும் நபரின் முகத்தை பார்த்துப் பேச என்று அன்றாட வாழ்வில் பல சிரமங்களை சந்திக்கும் அவர்களுக்காக ஒரு கருவியை உருவாக்கினார்.

அது தான் லாட் ரோலர் சக்கர நாற்காலி. இது புவிஈர்ப்பு விசையை கொண்டு சக்கரங்களை இயக்குகிறது. இது மின்சாரத்தில் இயங்கும் நாற்காலியல்ல. அமர்ந்திருப்பவர் ஒரு பொத்தானை அழுத்தினால் அவரை நிற்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது இந்த சிறப்பு நாற்காலி. பேட்டரி மாற்ற வேண்டும், சார்ஜ் செய்ய வேண்டும் என்பன போன்ற பிரச்சினைகள் இல்லை.

ஏனெனில் இது முற்றிலும் இயந்திரவியல் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறமிருக்கும் பெரிய சக்கரங்கள் படிக்கட்டுகள், கடினமான தரை ஆகியவற்றிலும் சிரமமின்றி நகர உதவும். இது அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இருக்கும் என்று தெரிவிக்கின்றார் டிமிட்ரியோஸ். கூடிய விரைவில் இந்த நாற்காலி விற்பனைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com