லண்டன்
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.
வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர்.
தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி கூறும் போது, வேற்று கிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம்.
அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டனின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மான் லண்டன் இதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றி கூறி இருப்பதாவது:-
பூமியை உயரத்தில் இருந்து பார்ப்பதை விட பெரிய அழகு எதுவுமில்லை - நான் அதை முதன்முதலில் பார்த்ததை மறக்க மாட்டேன்.
புறப்பட்ட பிறகு நாங்கள் வளிமண்டலத்தை விட்டு வெளியேறினோம், திடீரென்று ஜன்னல் வழியாக ஒளி ஓடியது. நாங்கள் பசிபிக் பெருங்கடலுக்கு மேல் இருந்தோம். புகழ்பெற்ற ஆழமான நீலக் கடல்கள் என் சுவாசத்தை எடுத்துச் சென்றன
வேற்றுகிரகவாசிகள் நிச்சயமாக வாழ்வது உண்மையே. அதிலும் மாற்றுக் கருத்தே இல்லை. அண்டத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. நிச்சயம் அதில் எல்லாவிதமான உயிரின வாழ்க்கையும் நிச்சயம் இருக்கும்.
அவர்களிடமிருந்து அற்புதமான விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இருக்கும் வேற்று கிரக நாகரிகம் ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் - மேலும் நாம் அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுவதற்கு முன்பு அவர்கள் நம்மை விட்டு விலகலாம்.
மனிதர்களைப் போல் கார்பனும் நைட்ரஜனும் நிறைந்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் உள்ளன. வேற்றுகிரகவாசிகள் இல்லை என்று நம்மால் சொல்லவே முடியாது கொலம்பஸ் சந்தித்த அமெரிக்காவின் அசல் குடிமக்களைப் போலவே இருக்கலாம். நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
56 வயதான ஹெலன், கடந்த 1991-ம் ஆண்டு தனது விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டவர். பிரிட்டன் சார்பில் முதல் விண்வெளிப் பயணத்தைத்தான் மேற்கொண்டிருந்தாலும் எப்போதும் முதல் பிரிட்டன் விண்வெளி வீராங்கனை என பாலின குறியீடுகளால் தன்னை அழைப்பதை விரும்பவில்லை என்கிறார் ஹெலன் ஹர்மான்.