தே.மு.தி.க.வில் விருப்பமனு அளிக்க 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளையொட்டி பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.
தே.மு.தி.க.வில் விருப்பமனு அளிக்க 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற்றுவருகின்றனர். தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க 3 நாட்கள் நீட்டிப்பு செய்து விருப்பமனுக்களை நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 15-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளையொட்டி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக உரிய நேரத்தில் அறிவிக்கும். நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி. தேமுதிக எங்கள் கட்சி; என்ன முடிவு எடுக்க வேண்டும். எப்போது அறிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் எங்கள் கழத்தை சேர்ந்தவர்களிடம் கலந்து பேசி உறுதியாக அறிவிப்பேன்.

நேரம் வரட்டும். கூல்-ஆ இருங்க.. கூட்டணி குறித்து எங்களிடம் திரும்பத் திரும்ப கேட்காதீர்கள். திமுக-அதிமுக இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் தவறானது. தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்று தமிழக மக்கள் அறிவார்கள்” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com