

சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் சமீப காலமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த ந.சுப்பிரமணியனுக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் அவருக்கு உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார். 2006-2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் ந.சுப்ரமணியன் இருந்தார்.