பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? - மு.க.ஸ்டாலின் பதிவு

அநீதியை இழைக்கும் தே.ஜ. கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? - மு.க.ஸ்டாலின் பதிவு
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?

தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம்.

#TamilNaduVsNDA எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு_தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம்_ஒன்றாக!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com