பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்ததை வரவேற்கிறேன்; ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

உங்கள் அரசியல் நிலைப்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பு எப்போது வரும்?" என செய்தியாளர்கள் ஒ பன்னீர் செல்வத்திடம் கேட்டனர்.
பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்ததை வரவேற்கிறேன்; ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Published on

மதுரை,

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, "தி.மு.க. அரசு, பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளது. இதனை வரவேற்கிறேன். மாறுபட்ட கருத்து கூறினால், தாய்மார்கள் கோபப் படுவார்கள்” என்றார். அப்போது. “தை மாதம் முடிந்து, மாசி மாதம் பிறந்து விட்டது.

உங்கள் அரசியல் நிலைப்பாடு பற்றிய முக்கிய அறிவிப்பு எப்போது வரும்?" என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "பொறுமையாக இருங்கள். தை மாதத்தை விடமாட்டேன் என்கிறீர் களே..." என பதில் அளித்தார். இது போல, மதுரையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, 'அப்படியா?' என்று கேட்டுச்சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com