நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக்குழு அமைப்பு

நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக்குழு அமைப்பு
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் அமைப்பாளராக பொன்.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இணை அமைப்பாளர்களாக எஸ்.ஆர்.சேகர், ஆர்.என்.ஜெயப்பிரகாஷ், மா.வெங்கடேசன், மாலா செல்வகுமார், எஸ்.ஆர்.ராமப்பிரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com