

சென்னை,
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மேம்படுத்தப்பட்ட கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா, நியாய விலைக்கடையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். யாநான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. நண்பர்களாகதான் பார்க்கிறேன், மரியாதை அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.