தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீர் டெல்லி பயணம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் பேரணி நடத்துகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீர் டெல்லி பயணம்
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2006-ம் ஆண்டு தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று வரும் காங்கிரஸ் கட்சி, 5-வது முறையாக இந்த தேர்தலிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை திமுக தலைமையிடம் முன்வைத்து வருகிறது.

இது தொடர்பாக, மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டாக, டெல்லியில் உள்ள அகில இந்திய தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

அதில் முக்கியமாக, ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், வாரியம் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க வகையில் இடஒதுக்கீடு போன்றவை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், அதற்கான காரணமும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று டெல்லி செல்கிறார். காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நாளை (பிப்.17) தமிழ்நாடு வரும் நிலையில் இன்று மதியம் அவசர பயணமாக செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து சென்னையில் நாளை நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் கே.சி.வேணுகோபால், கிரிஷ் ஷோடங்கர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com