பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது


பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது
x

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல் நாளில் 125 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

புதுச்சேரி

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல் நாளில் 125 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

மாணவர் கலந்தாய்வு

புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பள்ளி அளவில் நடந்து முடிந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களுக்கும், இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவ, மாணவர்களுக்கும் இறுதி வாய்ப்பாக மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு நடத்தி சேர்க்கை ஆணை வழங்க திட்டமிடப்பட்டது. இதன்படி மாணவர் சேர்க்கையானது காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளியில் நேற்று தொடங்கியது.

1,935 காலியிடங்கள்

மையப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை அமைப்பின் தலைவர் கொஞ்சுமொழி குமரன் தலைமையில் கலந்தாய்வு நடந்தது. அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,935 இடங்களை நிரப்புவதற்காக இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதற்காக நேற்று காலை, 499 மதிப்பெண் முதல் 200 வரை பெற்றவர்களும், பிற்பகலில் 199 முதல் 180 மதிப்பெண் வரை பெற்றவர்களும் அழைக்கப்பட்டனர். இதில் 125 மாணவ, மாணவிகள் சேர்க்கை ஆணை பெற்றனர்.

மீதமுள்ள இடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கலந்தாய்வு நடக்கிறது. காலை 10 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை நடக்கும் கலந்தாய்வில் 179 முதல் 175 மதிப்பெண் வரை பெற்றவர்களும், பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் கலந்தாய்வில் புதுவை குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story