சர்வதேச சுகாதார ஆராய்ச்சி மாநாடு


சர்வதேச சுகாதார ஆராய்ச்சி மாநாடு
x

பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் சர்வதேச சுகாதார ஆராய்ச்சி மாநாட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

பாகூர்

பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் சர்வதேச சுகாதார ஆராய்ச்சி மாநாட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

மருத்துவ மாநாடு.

புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகம் சார்பில் 2-வது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தில் இது போன்ற மாநாடு நடத்துவது பெருமையாக உள்ளது. சிறிய மாநிலத்தில் உலக அளவில் தலைசிறந்த டாக்டர்கள் உருவாக்கி வருவது நமக்கு பெருமை ஆகும். மகாத்மாகாந்தி மருத்துவமனையில் சிறந்த டாக்டர்களை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். மருத்துவ துறை வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

300 வல்லுநர்கள்

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் டாக்டர் நிட்டின் சேத் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். பல்கலைக்கழக பொது மேலாளர் ஆஷா சுரேஷ்பாபு சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெறுகிறது. இதில் 50 சர்வதேச வல்லுநர்கள் மற்றும் 250 தேசிய வல்லுனர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள். 3,500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மாநாட்டு அமைப்பின் செயலர் பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story