ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்


ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்
x

புதுச்சோியில் பண்டிகை கால உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கம் வலியுறுத்தினா்.

புதுச்சேரி

ஏ.ஐ.டி.யு.சி. புதுச்சேரி மாநில ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று முதலியார்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேது செல்வம் கலந்துகொண்டு நடைபெற்ற வேலைகள், எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் தினேஷ் பொண்ணையா, நிர்வாகிகள் செந்தில் முருகன், பாளையத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்ரமணியன், வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமைப்பு சாரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலத்தில் வழங்கி வரும் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலச்சங்கத்தை வாரியமாக மாற்றி செயல்படுத்த வேண்டும். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி சட்டமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


Next Story