

புதுச்சேரி
உஜ்ஜையினியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மகா காலேஸ்வரர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். இந்த நிகழ்வுகள் புதுவையில் உள்ள சிவன்கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த நேரடி ஒளி பரப்பை எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.