புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவார்


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவார்
x

புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவார் என்று வைத்திலிங்கம் எம்.பி. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவார் என்று வைத்திலிங்கம் எம்.பி. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநில அந்தஸ்து

புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். அவர் பொறுப்பேற்ற பிறகு நல்லாட்சி நடைபெற புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் சிதறி இருக்கின்றன. அவர்களிடம் உள்ள 22 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் காங்கிரஸ் வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும், ஒருவர் செல்லாத வாக்கையும் பதிவு செய்துள்ளார். இந்த ஆட்சியானது நிலையற்ற தன்மையை அடைந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்

புதுவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியாத நிலையில் போக்குவரத்து காவல்துறை இருந்து வருகிறது. விபத்துகளில் சிக்கி குழந்தைகள் பலியாவது வேதனை தருகிறது.

இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் வரை, மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரையிலான சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் அரசு துறைகள் இதற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

ஒருவழிப்பாதை

அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு நேரம் ஒன்றாக இருப்பதால் அனைவரும் ஒரே நேரத்தில் செல்லக்கூடிய நிலை உள்ளதால் சாலைகளில் நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.

இதை மாற்றியமைக்க முடியுமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாகனங்களை ஒரே பக்கத்தில் நிறுத்துவதற்கு உண்டான வழிமுறைகளையும், எந்தெந்த சாலைகளை ஒருவழிப்பாதையாக்கலாம் என்பது குறித்து கவனித்து அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story