கடலோர காவல்படையின் செயல்பாடு குறித்து ரங்கசாமி ஆலோசனை


கடலோர காவல்படையின் செயல்பாடு குறித்து ரங்கசாமி ஆலோசனை
x

கடலோர காவல்படையின் செயல்பாடு குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிய கமாண்டருடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

கடலோர காவல்படையின் செயல்பாடு குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிய கமாண்டருடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை

இந்திய கடலோர காவல் படையின் புதுவை கமாண்டராக அன்பரசன் சமீபத்தில் பதவியேற்றார். அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர்கள் இருவரும் புதுவை கடலோர காவல் படையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். மேலும் கடலோர காவல்படைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசித்தனர்.

சொந்த கட்டிடம்

கடலோர காவல்படை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கமாண்டர் அன்பரசன் விளக்கினார். குறிப்பாக கருவடிக்குப்பத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், புதுவை விமான நிலைய பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் தளங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story