குண்டுசாலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


குண்டுசாலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

குண்டு சாலையில்ஆக்கிரமிப்பு வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. இதை எதிர்த்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்குளம்

குண்டு சாலையில்ஆக்கிரமிப்பு வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. இதை எதிர்த்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைவிரிவாக்கம்

புதுவை மூலக்குளம் குண்டு சாலை பகுதியில் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரில் இருந்து மூலக்குளம் வரையிலான சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி, சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யக்கோரி ஏற்கனவே, நோட்டீஸ் வழங்கப்பட்டது. அங்கு வசித்தவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் மாற்று இடமும் கொடுக்கப்பட்டது.

ஆனால் பலர் வீடுகளை காலி செய்யவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

மீண்டும் அகற்ற முயற்சி

இந்தநிலையில் நேற்று மீண்டும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்துடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் பொதுமக்களில் சிலர் அப்புறப்படுத்த கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து பொதுமக்கள் கண்முன்னே அதிகாரிகள் வீடுகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திவிட்டுபொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க தொடங்கினர். பாதுகாப்பு பணிக்காக ரெட்டியார் பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம், கோரிமேடு போலீஸ் நிலைய போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story