மத்திய அரசு ரூ.531 கோடி ஒதுக்கீடு


மத்திய அரசு ரூ.531 கோடி ஒதுக்கீடு
x

புதுவையில் மேம்பாலம் கட்ட மத்திய அரசு ரூ.531 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுச்சேரி

புதுவையில் மேம்பாலம் கட்ட மத்திய அரசு ரூ.531 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலைவாய்ப்பு

புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி நாடு முழுவதும் வேலைவாய்ப்பு திருவிழாவை தொடங்கியுள்ளார். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. நேற்று மட்டும் 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேம்பாலம் கட்ட ரூ.531 கோடி

புதுவைக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் ரூ.225 கோடி புதிய சட்டசபை கட்டுவதற்கும், ரூ.531 கோடி மேம்பாலம் கட்டுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 6-வது, 7-வது ஊதிய குழுவிற்கு ரூ.150 கோடியை மத்திய அரசு வழங்கும். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை புதுவைக்கு தொடர்ந்து செயல்படுத்தும். இன்னும் ஓராண்டுக்குள் புதுவை மிளிரும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story