ரூ.3¼ கோடியில் பாதாள சாக்கடை இணைப்பு பணி


ரூ.3¼ கோடியில் பாதாள சாக்கடை இணைப்பு பணி
x

ரூ.3¼ கோடியில் பாதாள சாக்கடை இணைப்பு பணிைய முதல்-அமைச்சா் ரங்கசாமி ெதாடங்கி ைவத்தாா்.

புதுச்சேரி

உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 34 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கழிவுநீர் உட்கோட்ட பிரிவு மூலம் பாதாள கழிவுநீர் தொட்டிகளில் குழாய்கள் அமைத்து 3 தொகுதிக்கு உட்பட்ட 1,500 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கான தொடக்க நிகழ்ச்சி செங்கேணி அம்மாள் நகர் குண்டு சாலையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நேரு, கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்ட் ஜான்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story