கஞ்சா விற்ற வாலிபர் கைது

காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்கால் டி.கே. நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காரைக்கால் நகர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 31) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com