அரசு மருத்துவமனையில் சடலத்தின் முகம், விரல்களை கடித்த எலிகள்; உறவினர்கள் போராட்டம்

மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சடலத்தின் முகம், விரல்கள் உள்ளிட்டவற்றை எலிகள் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் சடலத்தின் முகம், விரல்களை கடித்த எலிகள்; உறவினர்கள் போராட்டம்
Published on

ரத்லம்,

மத்திய பிரதேசத்தில் நாராயண் மாலி என்பவர் மாண்ட்சார் பகுதியில் இருந்து ரெயிலில் திரும்பி கொண்டு இருந்துள்ளார். அவர் நேற்றிரவு மாரடைப்பினால் மரணம் அடைந்து உள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடல் ரத்லம் மாவட்டத்தில் ஜாவோரா நகர மருத்துவமனையின் சவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை அவரது உடலின் முகம் மற்றும் விரல்கள் ஆகியவற்றை எலிகள் கடித்து உள்ளன என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என மாவட்ட முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி நானாவேரா தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com