வெஸ்பா லிமிடெட் எடிஷன் அறிமுகம்

வெஸ்பா லிமிடெட் எடிஷன் அறிமுகம்
Published on

வெஸ்பா ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனம் இதில் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் பாப் பாடகர் ஜஸ்டின் பீபெருடன் கூட்டு சேர்ந்து இந்த பிராண்ட் ஸ்கூட்டரை பிரபலப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டணி யின் வெளிப்பாடாக 'ஜஸ்டின் பீபெர் எக்ஸ் வெஸ்பா' என்ற லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் பீபெரின் கற்பனை அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இது முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட மாடலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே இதனை விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்தால் மட்டுமே விநியோகிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித் துள்ளது. இந்த மாடலின் விலை சுமார் ரூ.6,45,690.

வாகனம் முழுவதும் வெள்ளை நிறத்தால் ஆனது. சக்கரங்கள், இருக்கைகளின் வெண்மை பளிச்சிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான முகப்பு விளக்கு, டி.எப்.டி. தொடு திரை ஆகியன இதன் சிறப்பு அம்சமாகும். இது 150 சி.சி. திறன் கொண்ட என்ஜினை உடையது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com