யமஹா ஆர் 3

யமஹா ஆர் 3
Published on

மோட்டார் சைக்கிளில் யமஹா தயாரிப்புகள் மீது இளைஞர் களுக்கு தீராத ஈடுபாடு உண்டு. இந்நிறுவனத் தயாரிப்புகள் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சீறிப் பாயும் செயல்திறன் கொண்டவையாக இருப்பதுதான் அதற்கு காரணம். யமஹா நிறுவனம் தற்போது ஆர் 3 வரிசையில் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. பர்ப்பிள் மற்றும் கருப்பு கலந்த நிறத்தில் மிக அழகாகத் தோற்றமளிக்கிறது. ஆர் 3 பிரீமியம் பிரிவில் இந்த மோட்டார் சைக் கிளை அறிமுகம் செய்கிறது.

இது லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. 321 சி.சி. திறன் கொண்ட தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 42 ஹெச்.பி. திறனை 10,750 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். அதேபோல 29.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இது 6 கியர்களைக் கொண்டது. டயமண்ட் பிரேம் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

முன்புறம் 37 மி.மீ. அளவிலான யு.எஸ்.டி. போர்க் உள்ளது. பின்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோ ஷாக் அப்சார்பர், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது. வழக்கமான டி.எப்.டி. திரைக்குப் பதிலாக இதில் நவீன எல்.சி.டி. திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி.யில் ஆனவை. இதில் ஏ.பி.எஸ். வசதி உள்ளது.

இது பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ற வகையிலான என்ஜினைக் கொண்டது. இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. இதில் செல்ப் ஸ்டார்ட் வசதி மட்டுமே உள்ளது. கிக்கர் கிடையாது. பெட்ரோல் குறைந்து வருவது குறித்து எச்சரிக்கும். டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், டியூப்லெஸ் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிரிப் மீட்டர் வசதியும் உள்ளது.

இதன் விலை சுமார் ரூ.3.50 லட்சம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com