

தேவையான பொருட்கள்
முட்டை - 4 (வேக வைத்தது)
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4 (சிறிதாக வெட்டியது)
தக்காளி - 4 (இதையும் சிறிதாக வெட்டிக் கொள்ளவும்)
பட்டை - ஒரு துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
கரம் மசாலா - ½ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அடுப்பை ஆன் செய்து, அதில் ஒரு கடாயை வைக்கவும். எண்ணெய்யை ஊற்றி சூடானதும் பட்டை துண்டை சிறிது சிறிதாக உடைத்து போடவும். சோம்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டும் சிவந்து வந்தவுடன் பொடியாக நறுக்கிவைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது கறிவேப்பிலையும் சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், சிறிதாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்க்கவும். சிறிதளவு உப்பும் சேர்த்து தக்காளியை நன்கு வதக்கவும். அதன்பிறகு இஞ்சி - பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும்.
அதன்பின்னர், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடாயை 2 நிமிடம் மூடி வேகவிடவும். அதை திறந்து பார்க்கும்போது எண்ணெய் பிரிந்த நிலையில் தெரியும். அதன்பின்னர், வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டி அதை சேர்க்கவும். முட்டை மேல் மசாலா படும் வகையில் லேசாக கிளறி ஒரு நிமிடம் வேகவிடவும். சுவையான முட்டை தொக்கு ரெடி.