தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாளமுத்துநகர் பஜாரில் கஞ்சா விற்று கொண்டிரந்த சுனாமி காலனியை சேர்ந்த மகேந்திரன் மகன் சஞ்சய்பாண்டி (வயது 22) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போன்று வடக்கு சோட்டையன்தோப்பு சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்ற சகாயமாதா பட்டினத்தை சேர்ந்த ஜெய்குமார் மகன் ரமேஷ்(19) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
கோவில்பட்டி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக கிழக்கு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் எட்டயபுரம் ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த கோவில்பட்டி வசந்தம்நகர் முதல் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (வயது 23) என்பவரை கைது செய்தனர்.






