8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் மீது போக்சோவில் வழக்கு

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (65 வயது). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் படித்து வரும் 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Also Read
ஊட்டி பைக்காரா ஏரியில் பெட்ரோல் படகு பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும் - ஐகோர்ட்டில் சுற்றுலாக் கழகம் உத்தரவாதம்
கோப்புப்படம்

இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

Also Read
கோடைகால சிறப்பு நிதி என சொல்வது சிரிப்பாக இருக்கிறது: செல்லூர் ராஜு
கோப்புப்படம்

அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com