பேச அனுமதி மறுப்பதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு


பேச அனுமதி மறுப்பதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
x
தினத்தந்தி 4 April 2025 11:47 AM IST (Updated: 4 April 2025 12:54 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது, "தமிழகத்தில் மக்கள்ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை. என தெரிவித்தார்.

1 More update

Next Story