இந்திர விமானத்தில் வேதநாயகி அம்மன் வீதி உலா

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழாவையொட்டி இந்திர விமானத்தில் வேதநாயகி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
இந்திர விமானத்தில் வேதநாயகி அம்மன் வீதி உலா
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் வேதநாயகி அம்மன் காமதேனு வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.அதன்படி நேற்று இந்திர விமானத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. வீதி உலா கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது. இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள், ஓதுவார் மூர்த்திகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com