ரேஷன் கடைகளில் அரிசியை மூட்டையாக கட்டிவைத்து எடை போடுகிறார்களா? - பொதுமக்களே உஷார்..!

ரேஷன் கடைகளில் பயனாளர்கள் கைரேகை வைக்கும் கருவியுடன் மின்னணு எடைத் தராசு இணைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 24,924 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆனால், பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால், நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில், தற்போது பயனாளர்கள் கைரேகை வைக்கும் கருவியுடன் மின்னணு எடைத் தராசு இணைக்கப்பட்டுள்ளது.

எடை மிஷினில் மூட்டை கட்டிய அரிசி

பயனாளர்கள் கைரேகை வைக்கும் கருவியில், முதலில் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்யப்படும். அதன் பிறகு, தொடுதிரையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தெரியும். அதில் யார் பொருட்கள் வாங்க வந்திருக்கிறாரோ, அவரது பெயரை ரேஷன் கடை பணியாளர் தேர்வு செய்தவுடன் சம்பந்தப்பட்டவர் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, சர்க்கரை அளவு வழங்கப்படும். பருப்பு, பாமாயில் எல்லோருக்கும் ஒரேபோல் வழங்கப்படும்.

ஆனால், தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கச் சென்றால் ஒருவருக்கே 10 நிமிடம் வரை நேரம் செலவாகிறது. மின்னணு எடை தராசில் ஒருவருக்கு அரிசி எடைபோட்டு வழங்கும் முன்பு, மூட்டையில் கட்டிய அரிசி அதில் வைத்து எடுக்கப்படுவதை பல நேரங்களில் நாம் பார்க்கலாம். ஆனால், ஏன் இப்படி செய்யப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது.

Also Read
அரசு பள்ளிக்கு நிலம் தானம் செய்த இஸ்லாமியர் பெயர்? - தமிழக அரசு விளக்கம்
கோப்புப்படம்

முறைகேடு அரங்கேற்றம்

இவ்வாறு மூட்டை கட்டிய அரிசி எடை தராசில் வைக்கப்பட்டால், முறைகேடு நடக்கிறது என்று அர்த்தம். அதாவது, ரேஷன் கார்டுதாரர் அரிசி வாங்கவில்லை என்றாலோ, அல்லது அவருக்கு குறைவான அளவே அரிசி வழங்கப்பட்டாலோ, சரியான அளவு அரிசி வழங்கப்பட்டதாக எடை தராசில் காட்டவே இதுபோன்ற முறைகேடு அரங்கேற்றப்படுகிறது. இதனால், மிச்சப்படும் அரிசியை வெளிச்சந்தையில் விற்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த முறைகேட்டை தடுக்க தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Also Read
கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர்கள் ஆய்வு
கோப்புப்படம்

அரசு நடவடிக்கை

அதாவது, ரேஷன் கடைகளில் உள்ள எடை தராசுகளின் மாடல், தயாரிப்பு நிறுவனங்களின் விவரங்களை அனுப்பிவைக்குமாறு, மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சில கடைகளில் முறைகேடு செய்யப்பட்டு, அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிகிறது. எனவே, எடை தராசை பி.ஓ.எஸ். கருவியுடன் இணைப்பதில் முறைகேடுகள் நிகழாமல் இருக்க, மென்பொருளில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள எடை தராசுகளின் மாடல், தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com